Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

‘வாய்தா’ படத்தின் கதாநாயகி தற்கொலை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்னையில் விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ பகுதியில் வசித்து வந்தவர் பவுலின் என்கிற தீபா, இவர் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்துக் கொண்டு சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி ‘வாய்தா’ என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மதியம் தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் துப்பட்டா மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், தீபாவின் உறவினர்கள் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் போனை எடுக்காததால் அவரது நண்பர் பிரபாகரன் என்பவர் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்த பொழுது தீபா தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து தீபாவின் சகோதரர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அவர் நேற்று இரவு சென்னை வந்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், முதற்கட்ட விசாரணையில் நடிகை கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், “ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன், ஆனால் காதல் கை கூடவில்லை. அதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்கிறேன்.. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை…” என்று எழுதியிருக்கிறாராம்.

- Advertisement -

Read more

Local News