Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

‘சொப்பன சுந்தரி’ ஆக நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னனி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட், தற்போது ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தமிழில் தயாரித்துள்ள முதல் படம் ‘சொப்பன சுந்தரி’.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

இவருடன் தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்ய, படத் தொகுப்பு பணிகளை சரத்குமார் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டியன் மேற்கொண்டிருக்கிறார். அஜ்மல் மற்றும் சிவாத்மிகா இசையமைத்துள்ளனர். ‘லாக்கப்’ படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

டார்க் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததுள்ளது.

இதையொட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனுடன் ‘சொப்பன சுந்தரி’ என்ற டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி ஒன்றையும் படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

‘சொப்பன சுந்தரி’ என்பது தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான பெயர். நகைச்சுவை வேந்தர்களான கவுண்டமணி- செந்தில் தொடங்கி, இந்தப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸின் முந்தைய படத்தின் வில்லனான இயக்குநர் வெங்கட் பிரபுவரை.. இந்தப் பெயரை பயன்படுத்தி மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறார்கள்.

அதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் இந்த ‘சொப்பன சுந்தரி’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

- Advertisement -

Read more

Local News