Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

‘விடுதலை’ படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘கோ’ ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, Red Giant Movies & RS Infotainment  ஆகிய நிறுவனங்கள் மீண்டும் இணைந்து ‘விடுதலை’ படத்தினை வழங்குகின்றனர்.

விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்தப் படம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி,  பரபரப்பாக  தயாராகி வருகிறது.

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த விடுதலை’ படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். மேஸ்ட்ரோ இசைஞானி’ இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இத்திரைப்படம் ஏற்கனவே அதன் பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் நம்பிக்கைக்குரிய நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுடன் திரை ஆரவலர்களிடையே பெரிய அளவினில்  அலைகளை உருவாக்கியுள்ளது.

மேலும், “Red Giant Movies  வெளியீடு  தற்போது  பல திரைப்படங்களுக்கு வெற்றியின் முகவரியாக மாறியிருப்பதால், இந்த ‘விடுதலை’ திரைப்படமும் பெரும் வெற்றியாக அமையும்…” என்கிறார் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமார்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

- Advertisement -

Read more

Local News