செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கும், அவரது தம்பி சுபாஷ் சந்திர போஸூக்கும் 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
‘ஆனந்தம்’ என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் லிங்குசாமி.இதனையடுத்து ‘ரன், ‘சண்டக்கோழி, பையா, ஜீ, அஞ்சான்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். கமல்ஹாசன் நடித்த ‘உத்தம வில்லன்’ படத்தையும் தயாரித்துள்ளார்.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு லிங்குசாமி இயக்கிய ‘தி வாரியர்’ என்ற திரைப்படம் அண்மையில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.
இந்த நிலையில் ‘எண்ணி ஏழு நாள்” என்ற படத்திற்காக இயக்குநர் லிங்குசாமி பெற்ற கடனை திரும்ப செலுத்தவில்லை என்று பி.வி.பி. கேப்பிட்டல் நிறுவனம் செக் மோசடி வழக்கினை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பதிவு செய்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இத்தீர்ப்பில் இயக்குநர் லிங்குசாமி & அவரது சகோதரர் சுபாஷ் ஆகியோருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம்.
லிங்குசாமி தரப்பில் மேல் முறையீடு செய்யவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| | |