ஜெயம் ரவி நடிக்கும் 30-வது படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முதல்கட்ட படப்பிடிப்பில் ஜெயம் ரவியும், படத்தின் நாயகியான பிரியங்கா மோகனும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இத்திரைப்படம் அண்ணன், தங்கை கதை அம்சத்தை கொண்டது என்றும் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் உணர்வுபூர்வமான ஒரு அண்ணன் தங்கை பாசத்தை கொண்ட படமாக இது இருக்கும் என்று தெரிகிறது.
தற்போது நடைபெற்று வரும் முதல் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் முடிவடையும் என்றும் அதன் பிறகு ஊட்டியில் இருந்து சென்னை திரும்பும் படக்குழுவினர் சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனத்தினர் தயாரித்து வருகின்றனர்.
மேலும் இந்தப் படத்தில் நட்டி நட்ராஜ் மற்றும் விடிவி கணேஷ் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.