விஜய் ஆண்டனியின் ‘கொலை’ திரைப்படம் அதில் பங்கேற்றிருக்கும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களால் ஆவலை தூண்டுகிறது.
Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து தயாரிக்க,
பாலாஜி K.குமார் எழுதி இயக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
எழுத்து, இயக்கம் – பாலாஜி K.குமார், பேனர் – Infiniti Film Ventures & Lotus Pictures, தயாரிப்பாளர்கள் – கமல் போஹ்ரா, G.தனஞ்சயன், பிரதீப் P, பங்கஜ் போஹ்ரா, டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை, சித்தார்த்தா சங்கர் & RVS அசோக் குமார், ஒளிப்பதிவு – சிவகுமார் விஜயன், இசை – கிரிஷ் கோபாலகிருஷ்ணன், படத் தொகுப்பு – செல்வா R.K., கலை இயக்கம் – K.ஆறுசாமி, VFX மேற்பார்வையாளர் – ரமேஷ் ஆச்சார்யா, ஒலி வடிவமைப்பு – விஜய் ரத்தினம், மறுபதிவு கலவை – A.M.ரஹ்மத்துல்லா, ஆடை வடிவமைப்பு – ஷிமோனா ஸ்டாலின், சண்டை பயிற்சி இயக்கம் – மகேஷ் மேத்யூ, நடன இயக்கம் – சுரேஷ், மில்டன் ஒபதியா, சிராக் ரங்கா
பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா – ரேகா (D’One)
இந்தக் ‘கொலை’ திரைப்படம் கடந்த ஒரு வாரமாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. ‘லைலாவை கொன்றது யார்’ எனும் ஹேஸ்டேக் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. ‘கொலை’ படம் குறித்து பரவும் இந்த செய்தி திரைப்பட ஆர்வம் இல்லா பொது ரசிகர்களுக்கும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.
இந்த ‘கொலை’ சஸ்பென்ஸ் மர்ம திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய கதாபாத்திரங்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர்களின் புதுமையான முயற்சிக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.
கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் இந்த புதுமையான முயற்சி
மீனாட்சி சவுத்ரி நடித்த ‘லீலா’ கதாபாத்திரத்தின் அறிமுகத்துடன் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, பான்-இந்திய பரபரப்பான நடிகர் முரளி சர்மா ‘தி ஏஜென்ட் ஆதித்யா பாத்திரத்திலும், ‘தி பாய்பிரண்ட், சதீஷ் பாத்திரத்தில் சித்தார்த்த ஷங்கர், ‘தி பாஸ், ரேகா’ பாத்திரத்தில் ராதிகா சரத்குமார் அவர்களும், ‘புகைப்படக்காரர் அர்ஜுன்’ பாத்திரத்தில் அர்ஜுன் சிதம்பரம், ‘மேனேஜர் பப்லு’ பாத்திரத்தில் கிஷோர் குமார் , ‘பக்கத்து வீட்டுக்காரர் வினோத்’ பாத்திரத்தில் சம்கித் போஹ்ரா, ‘தி காப் – மன்சூர் அலி கான்’ பாத்திரத்தில் ஜான் விஜய், ‘அப்ரண்டிஸ் சந்தியா’ பாத்திரத்தில் ரித்திகா சிங் ஆகியோருடன் ‘துப்பறியும் விநாயக்’ பாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
கதாபாத்திரங்களைப் பற்றிய சரியான தெளிவை பார்வையாளர்களுக்கு அளிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் ‘கொலை’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
இது அதன் உயர் தர காட்சிகள், கதாபாத்திரங்களின் புதுமையான அறிமுகம், ஒரு அற்புதமான இசையில் பழைய எவர்க்ரீன் பாடலான ‘புதிய பறவை’யிலிருந்து ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடலோடு, நம்மை கட்டிப் போடும் அளவுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.