Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படம் ‘காரி’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கிராமத்துப் பின்னணியில் பிரம்மாண்டமாக, ஆக்சன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களுடன் உருவாகும் ‘காரி’ என்கிற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சசிகுமார்.

தற்போது கார்த்தி நடித்து வரும் சர்தார்’ படத்தைத் தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக, தனது 5-வது படைப்பாக தயாரிப்பாளர் எஸ்.லஷ்மண் குமார் மிகுந்த பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரிக்கிறார். 

இந்தப் படத்தில் கதாநாயகியாக பார்வதி அருண் என்பவர் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் செம்பருத்திப் பூ’, மோகன்லாலின் மகன் பிரணவ் நடித்த ’21-ம் நூற்றாண்டு’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். மேலும் கன்னடம் மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ளார்.

வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ஜேடி சக்ரவர்த்தி நடிக்கிறார். இவர்கள் தவிர முக்கிய வேடங்களில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், ‘ஆடுகளம்’ நரேன், ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, நாகி நீடு, பிரேம், ‘பிக்பாஸ்’ புகழ் சம்யுக்தா, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பலர் நடித்துள்ளார்.

இசை – டி.இமான், ஒளிப்பதிவு – கணேஷ் சந்திரா, படத் தொகுப்பு – சிவ நந்தீஸ்வரன், கலை இயக்கம் – மிலன், சண்டை இயக்கம் – அன்பறிவு, நிர்வாகத் தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு மேற்பார்வை – A.பால் பாண்டியன், மக்கள் தொடர்பு – A. ஜான், எழுத்து, இயக்கம் – ஹேமந்த்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் போஸ்டரே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும்விதமாக அமைந்துள்ளது. இயக்குநர் வெற்றி மாறன் இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார்.

“காரி’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்திற்கு சசிகுமார் போன்ற பொருத்தமான நடிகர் அமைந்துவிட்டது சிறப்பான ஒன்று…” என்கிறது படக் குழு.

தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

Read more

Local News