Touring Talkies
100% Cinema

Wednesday, November 12, 2025

Touring Talkies

“10 பெண்களுடன் உறவு கொண்டுள்ளேன்..” – மலையாள நடிகர் விநாயகனின் பரபரப்புப் பேட்டி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாளத்தில் பிரபலமான நடிகரான விநாயகன் மீ டூ பற்றி சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

விநாயகன், நவ்யா நாயர் நடிப்பில் உருவான ‘ஒருத்தி’ என்ற மலையாளத் திரைப்படம் கடந்த வாரம் கேரளாவில் வெளியானது.

இதையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விநாயகனும் கலந்து கொண்டார். அப்போது முன்னாள் மாடல் அழகியும், தலித் செயற்பாட்டாளருமான ஒரு பெண் அவர் மீது சுமத்திய ‘மீ டூ’ குற்றச்சாட்டு குறித்துக் கேட்கப்பட்டது.

இந்தக் கேள்விக்கு மிக ஆவேசமாகப் பதிலளித்தார் நடிகர் விநாயகன். அவர் பேசும்போது, “மீ டூ என்றால் என்ன? எனக்குத் தெரியாது, அதைத்தான் நான் உங்களிடம் கேட்டேன். உங்களுக்கு ஒரு பெண்ணைப் பிடித்துவிட்டதா..! அடுத்து என்ன செய்வீங்க..? நான் ஒரு பெண்ணிடம் உடல் உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறேன். அந்த பெண்ணிடம் நான் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேனோ அதைச் சொல்கிறேன். அதை என் மனைவியிடம் விட்டுவிடுங்கள். முதலில் நீங்கள் உங்கள் முதல் செக்ஸ் உறவினை உங்களது மனைவியுடன்தான் செய்தீர்களா? எல்லோரும் அப்படி இல்லையே.!?

ஒரு பெண்ணுடன் நீங்கள் எப்படி உடலுறவு கொள்கிறீர்கள்? சொல்லுங்கள். அந்தப் பெண்ணை எப்படி நீங்கள் அழைக்கிறீர்கள்..? என் வாழ்க்கையில் நான் பத்து பெண்களுடன் உடலுறவு வைத்திருக்கிறேன். “உங்களுடன் நான் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறேன்..?” என்று நான் கேட்ட பத்து பெண்களில் அவளும் ஒருத்தி. நீங்கள் சொல்லும் மீ டூ இதுதானா..?

எனக்கு  ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று தோன்றினால் அந்த பெண்ணிடம் அது குறித்துக் கேட்பேன். அவள் சம்மதம் தெரிவித்தால் அவளுடன் உறவு வைத்துக் கொள்வேன். விருப்பமில்லை என்று சொன்னால் அங்கிருந்து நகன்றுவிடுவேன்.. இதில் மீ டூ எங்கே இருக்கிறது..?” என்றார் விநாயகன்.

நடிகர் விநாயகன் இப்படி கோபமாகப் பேசியதைக் கேட்டு அவரருகில் அமர்ந்திருந்த நடிகை நவ்யா நாயர் பெரும் சங்கடத்திற்குள்ளானார். இந்த வீடியோதான் தற்போது யூடியூப் தளத்தில் பெரும் வைரலாகி வருகிறது..!

- Advertisement -

Read more

Local News