Thursday, November 21, 2024

“25 ஹீரோயின்களை கல்யாணம் செஞ்சிருக்கேன்” – சத்யராஜின் கிண்டல்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“இதுவரையிலான என்னுடைய சினிமா வாழ்க்கையில் 25 ஹீரோயின்களை திருமணம் செய்திருக்கிறேன். அதையெல்லாம் வெறும் நடிப்பா எடுத்துக்கணும்..” என்கிறார் நடிகர் சத்யராஜ்.

பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ராதே ஷ்யாம்’. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது நடிகர் சத்யராஜ் இதைத் தெரிவித்தார்.

இந்த விழாவில் நடிகர் சத்யராஜ் பேசும்போது, “பிரபாஸை நாங்கள் ‘டார்லிங்’ என்றுதான் சொல்வோம். பூஜா என் டார்லிங்கின் டார்லிங். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கைரேகை நிபுணராக நடித்திருக்கிறானே என்று என்னைப் பற்றிப் பேசுகிறார்கள்.

பெரியார்’ படத்தில் நான் பெரியாராக வாழ்ந்திருக்கிறேன். ‘ஜெர்ஸி’ படத்தில் கிரிக்கெட் கோச்சாக நடித்திருக்கிறேன். அப்படித்தான் இதையும் எடுத்து கொள்ள வேண்டும். நான் ஹீரோவாக நடிக்கும் போது 25 ஹீரோயின்களை கல்யாணம் செய்திருக்கிறேன். அதை என்னவென்று சொல்வது..? நடிப்பை, நடிப்பாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் படம் மிக அழுத்தமான காதல் கதை. பிரபாஸ் பறந்து, பறந்து சண்டை போடுவார் என்றால், இதில் கப்பலே பறக்கிறது. இங்கு ஜேம்ஸ் கேமரூன்தான் வந்திருக்க வேண்டும். அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது. பிரபாஸின் அழகுக்காகவே எடுக்கப்பட்ட படம் இது. ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகாக இருக்கிறது. ‘பாகுபலி’க்கு பிறகு பிரபாஸுக்கு முக்கியமான பொறுப்பு வந்துள்ளது. ‘பான் இந்தியா’ என்று சொல்லி அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஒரு நடிகரை இந்தப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் படம் உண்மையில் பான் இண்டர்னேஷனல் படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்..” என்றார்.

- Advertisement -

Read more

Local News