வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒரூவரான A.வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடித்துள்ள திரைப்படம் ‘ரஜினி’.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் பெயரில் ஒரு அருமையான ஆக்சன் கமர்சியல் கலந்த குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது ‘ரஜினி’ திரைப்படம்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழ் சினிமா பிரபலங்கள் முன்னிலையில் அமைந்தகரை வி.ஆர். மால் தியேட்டரில் நடைபெற்றது.
இவ்விழாவினில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, T.G.தியாகராஜன், K.ராஜன், இயக்குநர் செல்வமணி, மனோபாலா, நடிகை ஜெயச்சித்ரா, இசையமைப்பாளர் இமான், கல்விதந்தை AC சண்முகம், இயக்குநர் R.V.உதயகுமார், T.சிவா, நடிகர் ஜீவன், அடி தடி முருகன், தீனா, ஜாகுவார் தங்கம், ஜான் மேக்ஸ், சக்தி சிதம்பரம், திருமலை உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் படத்தின் நாயகியான ஷெரின் பேசும்போது, “இந்தப் படத்தில் விஷிவல், பாட்டு எல்லாமே சூப்பராக இருக்கிறது. எங்கள் படத்திற்கு கவர்ச்சியே ஹீரோதான். நானெல்லாம் இல்லை. வேறு யாரும் இல்லை. அவர் ஒருத்தர்தான். படத்தின் துவக்கத்தில் இருந்தே அதிகம் சாப்பிடாமல் 8 பேக்ஸ் வைக்க பயிற்சி எடுத்து கொண்டிருந்தார்.
அவரைப் பார்க்க வைத்து கொண்டு நான் பிரியாணி சாப்பிட்டு அவரைக் கடுப்பேற்றியிருக்கிறேன். உண்மையில் அவர் மிக, மிக அழகாக இருக்கிறார். எங்களது இயக்குநர் படத்தை அட்டகாசமாக படமெடுத்துள்ளார். அவருடன் வேலை செய்தது அருமையான அனுபவம். அம்ரிஷ் ஸார் சூப்பராக இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டுள்ளோம். கீழே விழுந்து, அடி வாங்கி கடினமாக உழைத்து உருவாக்கியுள்ளோம்..” என்றார்.