Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

சிம்புவின் ‘பத்து தல’ கிளிம்ப்ஸ் யூ டியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிம்பு நடித்திருக்கும் ‘பத்து தல’ படத்தின் கிளிம்ப்ஸ் தற்போது யூ டியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

சிம்புவின் பிறந்த நாளையொட்டி வெளியாகியுள்ள ‘பத்து தல’ படத்தின் கிளிம்ப்ஸ் யூ டியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

’சில்லுனு ஒரு காதல்’ இயக்குநர் கிருஷ்ணா இயக்கும், இப்படத்தில் கெளதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர், மனுஷ்யபுத்திரன், டீஜே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ’மஃப்டி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த ‘பத்து தல’ திரைப்படம்.

கருப்பு சட்டை லுங்கியில் செம்ம மிரட்டலுடன் கவனம் ஈர்க்கும் சிம்பு ஏ.ஜி.ஆர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிளிம்ப்ஸில் ’ஏ.ஜி.ஆர்.கிட்ட மோதாதீங்கன்னா கேக்குறீங்களாடா?’, ’செயிண்ட் ஜார்ஜ் கோட்டையே ஏ.ஜி.ஆர் கோட்டைக்குள்ள நுழைய பயப்படும்டா’ போன்ற வசனங்களும் கவனம் ஈர்க்கின்றன.

இப்படத்தின் கிளிம்ப்ஸ் இதுவரை யூடியூபில் 1 மில்லியன் பார்வைகளை நெருங்கிக் கொண்டிருப்பதோடு யூ டியூப் ட்ரெண்டிங்கிலும் முதலிடத்தில் உள்ளது.

- Advertisement -

Read more

Local News