Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

ஆஸ்கர் விருது அமைப்பின் யூடியூப் சேனலில் ‘ஜெய் பீம்’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சினிமாவிற்கான மிக உயர்ந்த விருதான ஆஸ்கர் விருது வழங்கும் அமைப்பின் அமைப்பின் யூ டியூப் சேனலில் தமிழ் படமான ஜெய் பீம்’ படத்தின் சில காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

உலகின் மிக உயர்ந்த சினிமா விருதுகளில் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிகளுக்கு மிகப் பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. பல நாடுகளில் இருந்து தேந்தெடுக்கும் படங்களுக்கு விருது வழங்கி ஆஸ்கர் கௌரவிக்கப்படும். இந்த விருதுகளுக்கு பல படங்கள் போட்டியிட்டு அதில் சில படங்களே தேந்தெடுக்கப்படும்.

அந்த ஆஸ்கர் விருதுகளை வழங்கி வரும் அமைப்பு, தனது சொந்த யூடியூப் சேனலில் ’ சீன் அட் தி அகாடமி ‘ என்ற தலைப்பில் சில வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறது.

அந்த வகையில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, லிஜாமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் போன்ற பலரும் நடித்து ஓடிடியில் வெளியாகி அனைவரின் மத்தியிலும் பேசப்பட்ட ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் காட்சிகளை பதிவேற்றம் செய்திருக்கிறது ஆஸ்கர் அமைப்பு.

அந்த வீடியோவில் ஜெய் பீம்’ திரைப்படத்தின் சில காட்சிகளையும் படத்தின் இயக்குர் அந்த படத்தைப் பற்றிப் பேசும் சில விஷயங்களையும் ஆஸ்கர் அமைப்பு பகிர்ந்துள்ளது.

“இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிக பெரிய கவுரவம்” என்று திரையுலகத்தினர் பலரும் சூர்யாவிற்கும், இயக்குநர் ஞானவேலுவிற்கும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News