Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

தேவா பாடிய பாடல் மூலம் பரபரப்பாகியிருக்கும் ‘டேக் டைவர்ஷன்’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘டேக் டைவர்ஷன்’  என்கிற புதிய படத்தை இயக்குநர் சிவானி செந்தில்  இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ‘பேட்ட’, ‘சதுரங்க வேட்டை’ படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.

அறிமுக நாயகனாக சிவகுமார் நடிக்க, நாயகியாக பாடினி குமாரும் இரண்டாம் கதாநாயகியாக காயத்ரியும் நடித்துள்ளார்கள். மேலும் ஜான் விஜய், விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலா ஜெ.சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகியோரும்  நடித்துள்ளனர்.

இசை – ஜோஸ் பிராங்க்ளின். இவர் ஏற்கெனவே  ‘நெடுநல்வாடை’, ‘என் பெயர் ஆனந்தன்’ படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு – ஈஸ்வரன் தங்கவேல். இவர் ஏற்கெனவே நான்கு படங்களில்  பணியாற்றியுள்ளார்.  படத் தொகுப்பு – விது ஜீவா.

1980களில் 1990களில் மட்டுமல்ல 2000-யில் பால்ய காலத்தைக் கடந்தவர்களையும் ஈர்க்கும் வகையில் ஒரு காதல் கதையாக இந்தப் படம் உருவாகி உள்ளது.

இப்படத்திற்காக இசையமைப்பாளர் தேவா பாடிய ‘மஸ்தானா மாஸ் மைனரு’ என்கிற கானா பாடல், இணைய உலகில்  லட்சக்கணக்கானவர்களின் பார்வைகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

அந்தப் பாடலுக்குப் பிக் பாஸ்’ புகழ் நடன இயக்குநரான சாண்டி நடனமாடியிருக்கிறார். அதேபோல ‘யாரும் எனக்கில்லை ஏனடி?’ என்கிற  காதல் வலியைப் பற்றிப் பேசும் பாடலும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

ஆர்வமும் திறமையும் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க அனைவரையும் கவரும் முழுநீள எண்டர்டெய்னராக  இது உருவாகி உள்ளது.

படத்தைப் பார்த்த நாயகன் ராம்ஸூம் ஜான் விஜய்யும்  படத்தில் உள்ள கலகலப்பையும்  கமர்சியல் அம்சங்களையும் கண்டு வியந்து இயக்குநரைக் கட்டிப் பிடித்துப் பாராட்டியுள்ளனர்.

இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News