நடிகர் ஜெய் நடித்திருக்கும் ‘எண்ணித் துணிக’ படத்தின் டீசர் 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
Rain of Arrow Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் சுப்பிரமணியன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் ஜெய் மற்றும் அதுல்யா ரவி இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, சுரேஷ் சுப்பிரமணியன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
சாம் CS இசையமைக்க, J.B. தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மற்றும் V.J.சாபு ஜோசப் படத் தொகுப்பு செய்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் S.K.வெற்றி செல்வன் எழுதி இயக்கியுள்ளார்.
கடந்த விநாயகர் சதுர்த்தி திருநாளில் இந்த ‘எண்ணித் துணிக’ படத்தின் டீசர் வெளியானது. அந்த டீசர் தற்போது YouTube தளத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
இப்படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரவேற்பானது, ரசிகர்களிடையேயும், விநியோகஸ்தர்களிடையேயும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இயக்குநர் வெற்றி செல்வனின் அற்புத உருவாக்கத்தில், 90 வினாடிகளில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கும் நேர்த்தியான கதை, விழிகளை விரயச் செய்யும் தினேஷ் குமாரரின் ஒளிப்பதிவு, சாம் CS உடைய மனம் மயக்கும் பின்னணி இசை மற்றும் V.J.சாபு ஜோசப்பின் ஸ்டைலான எடிட்டிங் அனைத்தும் இணைந்த, இந்த டீசர் படத்தின் மீதும், கதையின் மீதும், ரசிகர்களிடம் பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
டீசருக்கு கிடைத்துள்ள இந்த மாபெரும் வரவேற்பின் மகிழ்ச்சியில், உற்சாகத்துடன் இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்து தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.