Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

சென்னை கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. அப்போது சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலசமைச்சராகியிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

கூடவே இந்தக் கொரோனா நோயை தடுக்கும்விதமாக எடுத்துவரும் முயற்சிகளுக்கு தனது நன்கொடையாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயையும் அளித்தார் ரஜினிகாந்த்.

இதற்கடுத்து கோட்டை வாசலில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினி, “அரசு சொல்லும் அனைத்து வழிமுறைகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டார்.

- Advertisement -

Read more

Local News