Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

“டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை” – தயாரிப்பாளர் திடீர் அறிக்கை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்தை ரம்ஜான் பண்டியன்று வெளியிட உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், டாக்டர்’ படம் திட்டமிட்டபடி ரிலீஸாக முடியாத சூழல் உருவாகி உள்ளது.

இதையடுத்து இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் உலா வந்தன. இதனால் குழப்பமடைந்த ரசிகர்கள், ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிடுமாறு படக் குழுவினரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் குறித்து கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ராஜேஷ் இன்று காலை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “தினமும் டாக்டர்’ பட அப்டேட் கேட்டு பலரும் எங்களைத் தொடர்பு கொள்கிறார்கள். முழுப் படமும் முடித்து எங்களது கையில் தயாராக உள்ள நிலையில், கொரோனா காரணமாக அதை வெளியிட முடியாமல், பல பொருளாதார பிரச்சனைகளையும் எதிர்கொண்டுள்ளோம்.

படம் நல்லபடியாக வெளியாவதற்கு எனது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறேன். மறுபக்கம், கொரோனா இரண்டாவது அலையால் எனது சுற்றங்களையும், நண்பர்களையும் இழந்து கொண்டிருக்கிறேன்.

இது போன்ற ஒரு சூழ்நிலையில் டாக்டர்’ படத்தின் ரிலீஸ் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்…” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News