Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

அஜித் பட வில்லன் நடிகர் ரசிகர்களிடம் வைத்திருக்கும் வேண்டுகோள்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு நடிகரான கார்த்திகேயா, “தனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தால் வெற்றிக் கொடி நாட்டுவேன்…” என்று பகிரங்கமாகவே தனது ரசிகர்களிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2018-ம் ஆண்டு தெலுங்கில் ஆர்.எக்ஸ்.100’ என்ற படத்தில் சிவா’ என்ற நாயக கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் கார்த்திகேயா. அந்த ஒரே படத்தின் வெற்றியின் மூலம் ஒரே நாள் இரவில் புகழ் பெற்றார் கார்த்திகேயா.

ஆனால் அதையடுத்து அவர் நடித்த ‘ஹிப்பி’, ‘குணா 360’, ‘கேங் லீடர்’, ‘90 ML’ ஆகிய  படங்கள் தோல்வியடைந்தன. இருப்பினும் கார்த்திகேயாவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்தன. ஆனால் இந்தப் படங்கள் வெற்றி பெறாதது கார்த்திகேயாவுக்கு மிகுந்த சங்கடத்தைக் கொடுத்திருக்கிறது.

இதனாலேயே திடீரென்று தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் கார்த்திகேயா. அந்த வேண்டுகோளில், “என் படங்களைப் பிடிக்காதவர்கள் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். அடுத்தபடியாக நல்லக் கதைகளைத் தேர்வு செய்து நடித்து மீண்டும் உங்கள் முன்பு தோன்றுவேன். எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்…” என்று தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார் கார்த்திகேயா.

“தெலுங்கு நடிகரின் கதை நமக்கெதுக்கு?” என்கிறார்களா.. அதில்தான் ஒரு டிவிஸ்ட் உள்ளது. தமிழகத்தில் ‘தல’யின் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தில் இந்தக் கார்த்திகேயாதான் வில்லனாக நடித்திருக்கிறார்.

ஸோ.. இந்த வலிமை’ திரைப்படமும் இவரது கேரியரை உயர்த்திவிட்டால் அதுவும் நல்லதுதானே..?!

- Advertisement -

Read more

Local News