Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

விஜய்யின் 65-வது படம் ரஷ்யாவில் படமாகிறது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘மாஸ்டர்’ படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தை நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது விஜய்யின் 65-வது படமாகும்.

இந்த படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்றும், அவருக்கு ரூ.3 கோடியே 50 லட்சம் சம்பளம் பேசி உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஆனால் இது பற்றி நடிகை பூஜா ஹெக்டே கூறும்போது, “விஜய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்…” என்று மட்டுமே சொல்லியிருக்கிறார்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பை ரஷியாவில் நடத்த முடிவு செய்து உள்ளனர். இதற்காக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ரஷியாவுக்குச் சென்றுள்ளார். அங்கே பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்து வருகிறார் இயக்குநர் நெல்சன்.

ரஷியாவில் தான் இருக்கும் புகைப்படங்களையும் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார் இயக்குநர் நெல்சன். ரஷியாவில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த பின்னர் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News