Friday, November 22, 2024

இந்தி மார்க்கெட்டைப் பிடிக்க முயலும் நடிகர் விஷால்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஷால் நடித்த படங்கள் தெலுங்கிலும் கொஞ்சம் ஓடும். வேறு மொழிகளிலும் அவருக்கு இதுவரையிலும் மார்க்கெட் இருந்ததில்லை. ஆனால் இந்த மார்க்கெட் பற்றிய விஷயத்தை ‘இரும்புத் திரை’ திரைப்படம் முதல் முறையாக மாற்றிமைத்தது.

‘இரும்புத் திரை’ திரைப்படத்திற்கு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம், கன்னட டப்பிங் வெளியீட்டில் கிடைத்த மிகப் பெரிய வெற்றியை பாலிவுட்காரர்களை விஷால் பக்கம் திருப்பியது.

இப்போது ‘இரும்புத் திரை’ திரைப்படம் ஹிந்தியில் மொழி மாற்றம் செய்யப்படவுள்ளது. இதில் ஹிரித்திக் ரோஷன் நடிக்கவிருக்கிறார். வில்லனாக அர்ஜூன் நடித்த கதாபாத்திரத்தில் விஷால் நடிக்க எண்ணுகிறாராம். ஆனால் இதுவரையிலும் உறுதியாகத் தெரியவில்லை.

இந்த நேரத்தில் தனக்கு பாலிவுட்டில் கிடைத்திருக்கும் நல்ல பெயரை மென்மேலும் உயர்த்தத் திட்டமிட்டு வருகிறார் நடிகர் விஷால்.

இதற்காக தற்போது அவர் நடித்திருக்கும் ‘சக்ரா’ படத்தை இந்தியில்  “சக்ரா கா ரக்சக்” என்னும் பெயரில் டப்பிங் செய்து வெளியிடுகிறார் விஷால்.

சமீபத்தில் வெளியான சக்ரா’ படத்தின் ட்ரெய்லர் பெரும் வரவேற்பு பெற்று, வைரலாகி வருகிறது. படத்தின் ட்ரெய்லர் ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்ப்பில் இந்தி திரை விநியோகஸ்தர்கள் ‘சக்ரா கா ரக்சக்’ படத்தினை இந்தி படத்திற்கு இணையான பெரும் எண்ணிக்கை கொண்ட திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

இது குறித்து நடிகர் விஷால் பேசும்போது, “இந்தியாவில் சினிமா தியேட்டர்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வருவது மகிழ்ச்சியை தருகிறது. தமிழ், ஆந்திரா, தெலுங்கானா மக்கள் திரைப்படங்கள் மீது கொண்டிருக்கும் காதலும் அவர்கள் தந்துவரும் ஆதரவு மிகப் பெரியது.

கடினமான உழைப்பில், பெரும் பொருட்செலவில் இந்த சக்ரா’ திரைப்படத்தினை உருவாக்கியுள்ளோம். சைபர் க்ரைம் உலகினை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘சக்ரா’ படத்தின் டிரெய்லரை ரசிகர்கள் கொண்டாடியுள்ளார்கள். இந்தி விநியோகஸ்தர்களிடம் இருந்தும் பாராட்டு கிடைத்திகுப்பது எனக்குப் பெரும் நம்பிக்கையை தந்துள்ளது.

எனவே இதன் இந்தி பதிப்பையும் உடனேயே வெளியிடுகிறோம். இத்திரைப்படம் ஹிந்தியிலும் பெரும் வெற்றியைப் பெறும் என்று உறுதியாய் நம்புகிறேன்..” என்றார்.

சைபர் க்ரைம் உலகை மையப்படுத்தி, திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த “சக்ரா” படத்தினை விஷாலின் Vishal Film Factory நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் விஷால், ஷ்ரதா ்ரீநாத், ரெஜினா கஸண்ட்ரா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சிருஷ்டி டாங்கே, மனோபாலா ரோபோ சங்கர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் M.S.ஆனந்தன் எழுதி இயக்கியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News