Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

கதாபாத்திரத்திற்காக 13 கிலோ எடையைக் குறைத்துக் காட்டிய ஐஸ்வர்யா தத்தா..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கதாப்பாத்திரத்திற்காக நடிகர்கள் உடல் எடையை குறைப்பதையும், கூட்டுவதையும் நாம் அறிந்திருப்போம். ஆனால் எப்போதும், நடிகைகள் அவ்வாறு செய்வதில்லை. ஆனால் இந்த விதியினை உடைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

SSHHH’ படத்தில் தான் ஏற்று நடிக்கும் பாத்திரத்தின் தன்மைக்காக 13 கிலோ உடல் எடையினை குறைத்து புத்தம் புது பொலிவுடன் தோற்றமளிக்கிறார்.

‘பிக்பாஸ்’ மூலம் புகழடைந்த அவர், தற்போது தமிழில் நாயகியாக  7 படங்களில் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் வின்னர் ஆரி நடிக்கும் ‘அலேகா’, ‘PUPG’, ‘கூடவன்’, ‘கன்னி தீவு’, ‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’, பாலாஜி மோகன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் தலைப்பிடபடாத படம் மற்றும் ‘மிளிர்’ முதலான படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா தத்தா

இதில் ஒவ்வொரு படமும் ஒவ்வொருவிதமான கதைகளங்களில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்துடன் அமைந்திருக்கின்றன.  இப்படங்கள் தன் திரை வாழ்வின் முக்கியமான படங்களாக,  திருப்புமுனை தருமென பெரும் நம்பிக்கையில் உள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

இவர் நேற்று வெளியிட்டுள்ள இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட்டிங்காகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News