நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் இணைந்து வழங்கும் ‘ரவுடி பிக்சர்ஸ்’ வெளியிடவிருக்கும் கூழாங்கல் திரைப்படம் ரோட்டர்டாம் நகரில் நடைபெற்ற டைகர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தை பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

2 மாதங்களுக்கு முன்பாகத்தான் இத்திரைப்படத்தை நயன்தாரா-விக்னேஷ் சிவன் கூட்டணி கைப்பற்றியது. இத்திரைப்படத்தின் விளம்பரத்தில் முக்கியப் பங்காற்றி வரும் நயன்தாரா இத்திரைப்படம் வெளிநாட்டு திரைப்பட விழாவில் பங்கேற்றதையும், விருது பெற்றதையும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜும் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்தச் செய்தியை வெளியிட்டு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
படக் குழுவினருக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.