Touring Talkies
100% Cinema

Tuesday, September 9, 2025

Touring Talkies

இசைஞானி இளையராஜா புதிய ஸ்டூடியோவைத் துவக்கினார்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசைஞானி இளையராஜா தனக்கென்று புதிதாக ஒரு இசைக் கூடத்தை சென்னையில் நிறுவியிருக்கிறார்.

கடந்த ஆண்டுவரையிலும் சாலிகிராமம் பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோவை பல்லாண்டு காலமாக பயன்படுத்தி வந்த இசைஞானி இளையராஜா, அந்த ஸ்டூடியோவின் நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அங்கிருந்து வெளியேறினார்.

அதன் பின்பு பல முறை, பல வழிகளில் முயற்சித்தும் அந்த பிரசாத் ரிக்கார்டிங் தியேட்டர் அவருக்குக் கை கூடவில்லை. ஆனாலும், மனம் தளராமல் தனக்கென்று தனியாக ஒரு ரிக்கார்டிங் ஸ்டூடியோவை அமைத்துவிட்டார் இசைஞானி இளையராஜா.

நுங்கம்பாக்கத்தில் புகழ் பெற்ற பிரிவியூ தியேட்டராக இருந்த எம்.எம்.தியேட்டரைத்தான் இசைஞானி இப்போது முழுமையாக விலைக்கு வாங்கி அதைத் தனது பெயரிலேயே ‘இளையராஜா ரிக்கார்டிங் ஸ்டூடியோ’வாக மாற்றியிருக்கிறார்.

புத்தம் புதிய பொலிவுடன் அந்தக் கட்டிடமே மாற்றியமைக்கப்பட்டு இசைஞானியின் அமைதிக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்றைக்குத்தான் அந்த ஸ்டூடியோ முழு வீச்சில் இயங்கத் துவங்கியுள்ளது. இன்றைய முதல் நாளிலேயே இசைஞானி இளையராஜா, இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் படத்திற்கு ஒரு பாடலை இசையமைத்துத் தந்திருக்கிறார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின்போது அந்தப் படக் குழுவினரும், இசைஞானி இளையராஜாவின் குடும்பத்தினரும், இயக்குநர் வெற்றி மாறனும் உடன் இருந்துள்ளனர்.

இசைஞானி இளையராஜாவின் இந்தப் புதிய பாதை சிறப்பாக அமைய மனதார வாழ்த்துகிறோம்..!

- Advertisement -

Read more

Local News