Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய விவகாரம்- வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பொதுவாக போலீஸ் ஸ்டேஷனில் ரவுடிகள் லிஸ்ட்டில் இடம் பிடித்திருப்பவர்கள்தான் சமீப காலமாக தங்களுடைய பராக்கிரமத்தைக் காட்டுவதற்காக தங்களது பிறந்த நாளன்று பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடியிருக்கிறார்கள்.

ஆனால், இப்போது ஒரு நடிகர்.. அதுவும் இப்போதைய இளைஞர்களிடத்தில் மிகப் பெரிய ஆதரவைப் பெற்றிருப்பவர்.. நடிகர் விஜய் சேதுபதி இதைச் செய்திருப்பதுதான் இன்றைய ஹாட்டான டாபிக்.

இன்று நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாள். இதையொட்டி இன்று தனது அலுவலகத்தில் பிறந்த நாள் கொண்டாடியிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது ஒரு மிகப் பெரிய பட்டாக்கத்தியை வைத்து கேக்கை வெட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி.

இந்தப் புகைப்படம் வைரலாகப் பரவத் துவங்கியவுடன் விஜய் சேதுபதிக்கு பல இடங்களில் இருந்தும் கண்டனங்கள் வந்து குவிந்துவிட்டன.

அதிர்ந்து போன விஜய் சேதுபதி அடுத்த அரை மணி நேரத்தில் இதற்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார்.

ஆர்வக் கோளாறில் உடனிருப்பவர்களின் சந்தோஷத்திற்காக எதையாவது செய்துவிட்டு பின்பு வருத்தப்படுவது கலைஞர்களின் வாடிக்கையாகிவிட்டது.

அதில் விஜய் சேதுபதி போன்ற ‘மக்கள் செல்வன்’ என்று போற்றப்படுபவர்களும் சிக்குவது வருத்தத்திற்குரியது.

- Advertisement -

Read more

Local News