Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

“காட்சிகளை நீக்காவிட்டால் ஒரு ஷோ கூட ஓடாது” – ‘துக்ளக் தர்பார்’ படக் குழுவுக்கு ‘நாம் தமிழர்’ கட்சி எச்சரிக்கை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அறிமுக இயக்குநர் தீனதயாளனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன், மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீஸர் நேற்றைக்கு வெளியானது.

வெளியான உடனேயே அந்த டீஸரில் பேசப்பட்டிருக்கும் சில வசனங்கள், காட்சியமைப்புகள் சீமானின் நாம் தமிழர்’ கட்சியைக் குறிப்பதாக செய்திகள் பரவத் தொடங்கின.

இதையடுத்து நாம் தமிழர்’ கட்சியின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

“நீண்ட நெடுங்காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை ஒன்றையே ஒற்றை இலக்காக வைத்துக் கொண்டு கடந்த பதினொரு ஆண்டு காலமாக லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களின் வாழ்வை அர்ப்பணித்து இளைமையை தொலைத்து பொருளாதாரத்தை இழந்து கட்டமைத்துவரும் கட்சி நாம் தமிழர்’ கட்சி.

நேற்று வெளியான தங்களது திரைப்பட முன்னோட்டத்தில் ‘நாம் தமிழர்’ கட்சிக்கும், எங்களின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ‘செந்தமிழன்’ சீமான் அவர்களுக்கும் எதிரானதுபோல, கட்சியின் கோட்பாடுகளை களங்கப்படுத்துவதுபோல, சில காட்சிகள் இடம் பெற்றிருந்தது எங்களை மிகுந்த மன வேதனைக்குள்ளாக்குகிறது.

இது பற்றி படத்தின் தயாரிப்பாளர் திரு. லலித்குமார் அவர்களிடம் கேட்டபொழுது, “தெரியாமல்  நடந்துவிட்டது. அந்த மாதிரி காட்சிகளை CG பயன்படுத்தி படத்திலிருந்து முழுவதுமாக நீக்கி விடுகிறேன்…” என உறுதி அளித்துள்ளார்.

இருப்பினும் இம்மாதிரியான காட்சிகளை எடுத்த இயக்குநர் மற்றும் இதில் நடித்த நடிகர்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தக் காட்சிகளோடு இப்படம் திரைக்கு வருமாயின் உலகம் முழுவதும் ஒரு காட்சிகூட திரையரங்குகளில்  ஓடாது என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இழவு வீட்டில் இருக்கும் எங்களிடம் வந்து வம்பிழுக்கும் வேலையை விடுங்கள்.. இல்லையேல் இந்தக் கலைத் துறையிலிருந்து வெகுவிரைவில் அப்புறப்படுத்தப்படுவீர்கள்…” என்று எச்சரித்துள்ளார்கள்.

- Advertisement -

Read more

Local News