Touring Talkies
100% Cinema

Sunday, September 14, 2025

Touring Talkies

“வலிமை’ படம் எப்போ வரும்..?” – முதல்வர் எடப்பாடியிடம் கேள்வி கேட்ட இளைஞர்கள்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சுற்றுப்யணம் செய்து கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சரிடம் நடிகர் அஜீத்தின் ரசிகர்கள் சிலர் “வலிமை படத்தின் அப்டேட் என்ன..-?” என்றும், “வலிமை எப்போது வரும்…?” என்றும் கேட்டுள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் இந்தச் சூழலில் தலைவர்களும் தங்களது சூறாவளி சுற்றுப் பயணத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தபோது அவரிடத்தில் அவருடைய அடுத்தப் படம் எப்போது வரும் என்று சில இளைஞர்கள் குதர்க்கமாகக் கேட்டார்கள். இதுவும் வீடியோவாக வெளியாகி வைரலானது.

இப்போது தமிழகத்தின் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமியிடமும் இதேபோல் கேட்டுள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு கோவை பகுதியில் சுற்றுப்பயணம் செய்தபோது யாரோ சில வாலிபர்கள் முதல்வரின் கார் அவர்களைக் கடந்து செல்லும்போது “வலிமை அப்டேட் என்ன…?” என்றும், “வலிமை எப்போ வரும்..?” என்றும் சப்தமாகக் கேட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் வீடியோவில் பதிவாகி தற்போது யூடியூபில் மிக வேகமாக பரவி வருகிறது.

- Advertisement -

Read more

Local News