Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

உலகத் திரைப்பட விழாக்களுக்குச் செல்கிறது ‘சினம்’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

Movie Slides Pvt ltd நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் R.விஜயகுமார் தயாரித்துள்ள திரைப்படம் சினம்’.

அருண் விஜய் நாயகனாக நடித்திருக்கும் இந்த சினம்’ படத்தின் புத்தம் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படத்தை G.N.R.குமரவேலன் இயக்கியுள்ளார்.

2021-ம் வருடத்தின் ஆரம்பத்தில் உலகளவில் இந்தப் படத்தை வெளியிட ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில், முன்னதாக உலகம் முழுக்க  பல்வேறு திரைப்பட விழாக்களிலும் இப்படத்தை வெளியிட படக் குழு திட்டமிட்டு வருகிறது.

தற்போது திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் சிறப்பு பதிப்பை படத் தொகுப்பு செய்யும் வேலை தீவிரமாக நடந்து வருகிறது.

இது குறித்து நடிகர் அருண் விஜய் பேசும்போது, சினம் படத்தின் கரு உலகளவில்  அனைத்து ரசிகர்களையும் கவரும் தன்மை கொண்டது. அதனால் உலக ரசிகர்களுக்கு படத்தை திரையிட்டு காட்ட நினைத்தோம்.

படத்தில் ஆக்‌சனும், உணர்வுகளும் சரிபாதியாக கலந்திருக்கும். அது ரசிகர்களை படம் முழுக்க பரபரவென வைத்திருக்குமென நான் நம்புகிறேன். இப்படத்தை 2021-ம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்…” என்றார்.

நடிகர் அருண் விஜய் ஏற்கனவே இயக்குநர் நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள்’ படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார். மேலும் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகும் AV31’ படமும் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதற்கு பிறகு உடனடியாக இயக்குநர் ஹரி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

அருண் விஜய் இப்படத்தில் ‘பாரி வெங்கட்’ எனும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். பாலக் லால்வானி அவரது மனைவியாகவும் தேஷினி அவர்களது மகளாகவும் நடிக்கிறார்கள். சபீர் இப்படத்திற்கு இசையமைக்க, சில்வா சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News