சிம்புவின் அடுத்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு சமீபத்தில் இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் ’ஈஸ்வரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
‘ஈஸ்வரன்’ படத்தையடுத்து சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ’மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் ஏற்காட்டில் தொடங்க உள்ளது.
‘மாநாடு’ படத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு இன்றைக்கு வெளியாகியுள்ளது.
சிம்பு நடிக்கும் புதிய படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்க இருக்கிறார்.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் 20-வது படமான இந்தப் படத்தை இயக்குநர் கிருஷ்ணா இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே சூர்யா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ ஆரி நடித்த ’நெடுஞ்சாலை’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
சிம்பு உடன் தற்போதைய இளம் ஹீரோக்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் நடிக்கும் இந்தப் படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’முப்தி’ என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் டைட்டில் வரும் 24-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.
’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பை முடித்த உடன் சிம்பு இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.