Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

ரஜினியின் திடீர் பெங்களூரு பயணத்தின் மர்மம் என்ன..!?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கும் தமிழ்த் திரையுலகத்தின் ‘சூப்பர் ஸ்டாரான’ ரஜினிகாந்த் நேற்று பெங்களூருவுக்கு சென்றார்.

வரும் டிசம்பர் 12-ம் தேதியன்று அவருக்கு 70 வயதாகிறது. இதையொட்டி தனது அண்ணனுடன் இருக்க விரும்பியே பெங்களூர் சென்றிருக்கிறார் என்று கேட்டவர்களுக்குத் தகவல் சொல்கிறார்கள் போயஸ் தோட்ட வீட்டில் இருப்பவர்கள்.

ஆனால், 12-ம் தேதிக்கு இன்னும் 7 நாட்கள் இருக்கும் நிலையில் அவர் பெங்களூர் செல்வதன் காரணம் பொருத்தமாக இல்லையே என்று விசாரித்தபோது வேறு வில்லங்கங்களும் வெளியாகியிருக்கிறது.

கட்சி துவங்குவது உறுதி என்று ரஜினி சொன்ன நிமிடத்தில் இருந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், கட்சியில் சேரத் துடிக்கும் சினிமா பிரலங்கள் என்று பலரும் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுத் தொந்தரவு செய்வதால் அவர்களிடத்தில் இருந்து தப்பிக்கவே ரஜினி பெங்களூருக்குத் திடீரென்று கிளம்பி சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

பெங்களூரில் இருந்தாலும் ரஜினி தினமும் தமிழருவி மணியனிடமும், அர்ஜூன் மூர்த்தியிடமும் தினமும் பேசி வருகிறாராம். கட்சிக்குப் பெயர் சூட்ட வேண்டும்.. கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். அதோடு தற்போது இருக்கும் 38 மாவட்டங்களை 60 மாவட்டங்களாக உயர்த்த வேண்டும் என்று தமிழருவி மணியனும், அர்ஜூன் மூர்த்தியும் ஒருமித்தக் குரலில் கூறியிருக்கிறார்களாம்.

தி.மு.க., அ.தி.முக.வை போல நாமும் 4 அல்லது 2 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு பொறுப்பாளரை நியமித்தால் அது கட்சியை வளர்க்க உதவும் என்றும் ஆலோசகர்கள் இருவரும் சொல்லியிருக்கிறார்கள். இதுவும் ரஜினியின் கவனத்தில் உள்ளது. இந்த வேலைகளையெல்லாம் செய்வதற்காக தினமும் பல மணி நேரம் ஒதுக்கி அவர்களுடன் பேசி வருகிறார் ரஜினி.

அதோடு, கட்சியின் பெயரை ரசிகர்கள் மத்தியில்தான் தெரிவிக்க வேண்டும் என்பது ரஜினியின் ஆசையாம். இதனால் ஜனவரி மாதம் முதல் முறையாக ரஜினி ரசிகர்களை ஒன்று திரட்டி அவர்கள் மத்தியில் தெரிவிக்க இருக்கிறார் என்று மன்றத்தினர் சொல்கிறார்கள்.

இதனால்தான் எப்போதும் தனிமை விரும்பியான ரஜினி இந்த முறை தொந்தரவே இல்லாத இடத்தில் இருந்து இது குறித்துப் பேசுவோம் என்று சொல்லித்தான் பெங்களூர் சென்றிருப்பதாகச் சொல்கிறார்கள்.

பெங்களூருவில் தனது அண்ணன் சத்யநாராயணாவின் வீட்டில் தங்கியிருக்கும் ரஜினி தனது அண்ணனிடம் கட்சி ஆரம்பிப்பது பற்றிச் சொல்லி ஆசி வாங்கினார். அவர் அங்கே வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் வீட்டு வாசலில் வந்து குவிய.. ரசிகர்களுக்காக பால்கனியில் வந்து நின்று அவர்களைப் பார்த்து கை அசைத்து உற்சாகப்படுத்தினார்.

மேலும், கொரோனா பாதிப்பினால் முடக்கி வைக்கப்பட்டிருந்த அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 15-ம் தேதியன்று ஹைதராபாத்தில் துவங்கவிருக்கிறதாம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலையை மிக வேகமாக முடித்துவிட்டு அரசியலில் கால் வைத்துவிடலாம் என்பது ரஜினியின் எண்ணம்.

இதனால்தான் இதுவரையில் கொரோனாவை சொல்லி எஸ்கேப்பாயிருந்த ரஜினி இப்போது “நான் ரெடி” என்று படக் குழுவினருக்கு தகவல் அனுப்பி அவர்கள் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார்.

எப்படியிருந்தாலும் டிசம்பர் 30-ம் தேதி சென்னை திரும்பும் ரஜினி கட்சி துவங்கும் தேதியை மறுநாள் டிசம்பர் 31-ம் தேதி கண்டிப்பாக அறிவிப்பார் என்கிறார்கள்.

2021-ம் ஆண்டின் புதிய துவக்கம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் மிகப் பெரிய கொண்டாட்டமாக இருக்கப் போகிறது..!

- Advertisement -

Read more

Local News