Friday, November 22, 2024

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முறைகேடு : டி.ராஜேந்தர் புகார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போலியான ஆவணங்கள், அடையாள அட்டைகள் பயன்படுத்தி பலரும் வாக்களித்துள்ளதாக இயக்குநர் டி.ராஜேந்தர் புகார் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பதிவுத் துறை அலுவலகத்திற்கு இன்று நேரில் வந்த டி.ராஜேந்தர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு பொறுப்பாளராக இருந்த பத்திரப் பதிவுத் துறையின் தனி அலுவலர் மஞ்சுளாவிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் “நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போடபட்ட வாக்குகளில் 800 வாக்குகள் மட்டுமே சரியானது. சுமார் 250 கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளது.

யாரோ ஒரு சிலர் ஒட்டு மொத்தமாய் சந்தா கட்டாத உறுப்பினர்களுக்காக சந்தா கட்டி அவர்களுடைய அடையாள அட்டையை வாங்கிச் சென்றுள்ளனர். அவர்கள் மூலமாக தேர்தலின்போது கள்ள ஓட்டு போடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் இருக்கிறது..” என்று கூறியுள்ளார்.

இது குறித்து சில விளக்கங்களை கேட்டு பதிவுத் துறை அலுவலகத்தில் இயக்குநர் டி.ராஜேந்தர் விண்ணப்பித்துள்ளார்.

மழைவிட்டும் தூவானம்விடவில்லை’ என்பார்கள். அது திரைப்பட சங்கங்களின் தேர்தல்களுக்கு மட்டுமே பொருந்தும் போலிருக்கிறது.

- Advertisement -

Read more

Local News