Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இந்த வாரம் சுசித்ரா வெளியேறுகிறாரா..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் டிவியில் நடைபெற்று வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்படும் நபராக சுசித்ராதான் இருப்பார் என்று ஊர்ஜிதமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இடையில் வைல்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்த 2-வது நபர் பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா. இன்னொரு ஆண் பாடகரான வேல்முருகனை வெளியேற்றிய அதே நாளில்தான் சுசித்ராவும் உள்ளே நுழைந்தார்.

அவருடைய வருகை ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.

அவர் யாருடனும் சண்டையிடாமல் ஒவ்வொருவரும், அடுத்தவர்களைப் பற்றிச் சொல்லும் புகார்களைக் கேட்டுக் கொள்ளும் வேலையை மட்டுமே செய்தார். ‘பிக்பாஸ்’ ஏற்பாடு செய்த டாஸ்க்குகள் அனைத்திலுமே பாடல்கள் எதுவும் சம்பந்தப்படவில்லை என்பதால் சுசித்ராவுக்கு வேலையே இல்லை என்றாகிவிட்டது.

கடந்த சில நாட்களாக பாலாவுக்கும், ஷிவானிக்கும் இடையிலான நட்பை காதலாக நினைத்து சுசித்ரா ஏதோ கதை கட்டிப் பேச.. ஷிவானி பாலாவை தன்னிடமிருந்து சுசித்ரா நகர்த்துவதாக நினைத்துப் பேச.. அவரிடமே போய் பாலாவிடமிருந்து தான் விலகியிருக்கப் போவதாக சுசித்ரா சொல்ல.. ஒரு டெலிசீரியலுக்கு ஏற்ற திரைக்கதை கிடைத்துக் கொண்டுதான் இருந்தது.

ஆனால் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு இது போதவில்லை போலும். இந்த வாரத்திய நிகழ்ச்சியில் எவிக்சன் பட்டியலில் இருப்பவர்களிலேயே மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்றவராக சுசித்ராவே இருப்பதால் அவரே வெளியேறுவார் என்று ‘பிக்பாஸ்’ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News