தேஜூ அஸ்வினி, என்ன சொல்லப் போகிறாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர் தற்போது ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடித்துள்ள பிளாக்மெயில் திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இதுகுறித்து தேஜூ அஸ்வினி கூறுகையில், “சினிமாவுக்கு வந்தது முற்றிலும் எதிர்பாராத விதமாகத்தான். சினிமா விளம்பர நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு குறும்படத்தில் நடித்தேன். அதன் பின் மாடலிங், பிறகு சினிமா என பயணம் தொடங்கியது. பொருளாதார சூழ்நிலை மற்றும் என் கனவு இரண்டும் சேர்ந்து என்னை இந்த துறைக்கு இழுத்து வந்தன. இந்த சினிமா என் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது. அதனால் சினிமாவுக்கு என்றென்றும் உண்மையாக இருப்பேன்.
பல படங்களில் நடித்தும் சிலருக்கு கிடைக்காத ரசிகர் ஆதரவு எனக்கு கிடைத்தது, அது கடவுள் கொடுத்த பரிசு. ரசிகர்களின் மீதான என் காதல் முடிவில்லாதது. காதல் படங்களுக்குப் போலவே ஆக்ஷன் கதாபாத்திரங்களிலும் நடிக்க விருப்பம் உள்ளது. எல்லாவற்றுக்கும் காலமே விடை சொல்லும்” என தெரிவித்துள்ளார்.