Tuesday, November 19, 2024

4 தெலுங்கு படத்த காப்பியடிச்சு எடுத்த படம் தான் அது… சுந்தர் சி-ன் கலகலப்பான டாக்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுந்தர் சி ஒரு சமீபத்திய நிகழ்ச்சியில்,
தயாரிப்பாளர் ஒருவர் என்னை ஒரு படம் பண்ணலாம் என அழைத்தார். அப்போது ஹிட்டான தெலுங்கு திரைப்படங்களை ‘ரீமேக்’ செய்யலாம் என கூறினார். அப்போது அவர் பிரபலமான தெலுங்கு படங்களை ரீ மேக் பண்ணுவதை பற்றி கூறினார். அந்தப் படத்தைப் பார்த்தபோது, எனது 3 படங்களிலிருந்து பகுதிகளை காப்பி அடித்து அந்தப் படம் உருவாக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். எனது உரிமையில்லாமல் படங்களை அனுமதியின்றி காப்பியடித்து, தெலுங்கு படமாக ரீமேக் செய்திருந்தார். அதற்கு பழிவாங்கும் வகையில், 4 படங்களிலிருந்து பகுதிகளை நான் காப்பியடித்து ‘வின்னர்’ என்ற படத்தை உருவாக்கினேன் என்றார்.

வின்னர்’ படத்தில் கதாநாயகி ஆபத்தில் இருப்பது போல் கத்தியவுடன், காப்பாற்ற நடிகர் பிரஷாந்த் ஓடி வருவார். அப்போது குறுக்கே வடிவேலு ‘வந்துட்டேன்’ என கத்திகொண்டே ஓடி வந்து அந்த கோலிக்குண்டுகள் இருக்கும் மேட் மீது கால் வைத்து, ஒரு பந்து போல் அங்கும் இங்கும் அடிவாங்கி கீழே விழுவார். இப்படி தான் அந்த காட்சியை நான் மாற்றி அமைத்திருந்தேன்

இப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த பிறகு, சில நாட்கள் கழித்து நான் ஒரு தெலுங்கு படத்தின் காட்சியை பார்த்தேன். அந்த தெலுங்கு படத்தில் ‘வின்னர்’ படத்தில் வடிவேலு வழுக்கி விழும் காட்சியை அப்படியே காப்பியடித்து வைத்து இருந்தனர்”.

நானே தெலுங்கில் இருந்து தான் அந்த காட்சியை காப்பியடித்து சில மாற்றங்களுடன் படம் எடுத்து இருந்தேன். இது தெரியாமல், வின்னர் படத்திலிருந்து அந்த காட்சியை காப்பியடித்து தெலுங்கில் ஒரு படத்தை எடுத்துள்ளனர் என கலகலப்பாக தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News