இந்தாண்டு கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் 3 தமிழ்ப் படங்கள் போட்டியிடுகின்றன.
வருடாவருடம் கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான விழா வரும் நவம்பர் 20-ம் தேதி முதல் 28-ம் தேதிவரையிலும் கோவாவில் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் அந்தாண்டின் சிறந்த இந்தியத் திரைப்படங்களும் திரையிடப்படும்.
அந்த வகையில் இந்தாண்டுக்கான இந்தியன் பனோரமா பிரிவில் 25 திரைப்படங்கள் திரையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 3 படங்கள் தமிழ்ப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சூர்யாவின் ‘ஜெய்பீம்’, ‘குரங்கு பெடல்’, ‘கிடா’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன.
திரைப்படம் அல்லாத பிரிவில் ‘லிட்டில் விங்ஸ்’ என்ற தமிழ்ப் படமும் திரையிடுவதற்காகத் தேர்வாகியுள்ளது.
ஜனரஞ்சகமான படங்களின் பட்டியலில் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’, ‘ஆர்.ஆர்.ஆர்’., ‘அகண்டா’ உள்ளிட்ட 5 படங்கள் திரையிடப்படவுள்ளன.