Advertisement

‘ராக்கா’ படத்தின் தாமதம் குறித்து மனம் திறந்த அல்லு அர்ஜுன்!

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ராக்கா திரைப்படம், தெலுங்குத் திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாக உள்ளது. இப்படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆகாசம்லோ ஒக தாரா படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது தனது அடுத்த படமான ராக்கா குறித்து அவர் பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ராக்கா படம் உருவாகி வருவதற்கு எதிர்பார்த்ததைவிட அதிக காலம் எடுத்துக்கொள்வதைத் தானும் அறிந்திருப்பதாக அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவசரமாகப் படத்தை வெளியிடுவதைவிட, ரசிகர்கள் எதிர்பார்க்கும் தரத்தில் மிகச்சிறந்த படைப்பாகக் கொண்டுவர வேண்டும் என்பதில் படக்குழு உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ளார். படம் வெளியான பிறகு எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக அனைவரும் தீவிரமாக உழைத்து வருவதாகவும், சூப்பரான அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், படத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் என்றும், அவர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும் வகையில் சிறந்த திரைப்படத்தை வழங்குவோம் என்றும் அல்லு அர்ஜுன் உறுதியளித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply