‘முன்பே’ படப்பிடிப்பை நிறைவு செய்த டோவினோ தாமஸ் !

மலையாளத் திரையுலகில் கதைக்குத் தகுந்தவாறு தனது கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருபவர் டோவினோ தாமஸ். ‘மாரி’, ‘மின்னல் முரளி’ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகமான இவர், பிருத்விராஜ் இயக்கிய ‘எல் 2: எம்புரான்’ படத்திலும் நடித்துள்ளார்.

‘ARM’, ‘ஐடெண்டிட்டி’, ‘நரிவேட்டை’, ‘லோகா’ எனத் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களில் நடித்த டோவினோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, ‘ARM’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்தது. அண்மையில் வெளியான ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் மட்டும் விமர்சன ரீதியாகக் கலவையான கருத்துகளைப் பெற்றது.

இந்நிலையில், சைஜூ ஸ்ரீதரன் இயக்கத்தில் டோவினோ நடிக்கும் புதிய படத்துக்கு ‘முன்பே’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பனோரமா ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து டோவினோவும் இப்படத்தைத் தயாரிக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனைப் படப்பிடிப்புத் தள வீடியோவுடன் படக்குழு அறிவித்துள்ளதுடன், விரைவில் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply