சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான ‘டூரிஸ்ட் பேமலி’ திரைப்படம் கடந்தாண்டு மே 1-ந் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்தது. இப்படத்தை அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இலங்கை தமிழர்களான சசிகுமார் குடும்பம் அங்குள்ள பொருளாதார சூழல் காரணமாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அதன்பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடனும், எமோஷனலுடனும் படம் பதிவு செய்தது. இந்த நிலையில், ‘டூரிஸ்ட் பேமலி’ ஓராண்டு நிறைவை முன்னிட்டு படத்தின் படப்பிடிப்பு வீடியோவை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, “என் வாழ்க்கையை மாற்றிய திரைப்படம்” என பதிவிட்டுள்ளார்.
Add a Comment
