‘இந்தியத் திரையுலகத்தின் தந்தை’ என்று போற்றப்படும் ‘தாதா சாகேப் பால்கே’ பெயரில் வருடாவருடம் சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகளை ஒரு தனியார் அமைப்பு வழங்கி வருகிறது.
மும்பையைச் சேர்ந்த இந்த அமைப்பின் தலைவராக தாதா சாகேப் பால்கேவின் பேரனான சந்திசேகர் புசல்கார்ஜி உள்ளார்.
இவரது தலைமையில் ஒரு குழு வருடா வருடாம் தென்னிந்திய மொழிகளிலும், இந்தி மொழியிலும் வெளியாகும் சிறந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருகிறது.
2019-ம் ஆண்டிற்கான தமிழ்ச் சினிமாவுக்கான ‘தாதா சாகேப் பால்கே விருது’கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி சிறந்த திரைப்படமாக ‘டூ லெட்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
‘அசுரன்’ படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக நடிகர் தனுஷ் சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
‘ராட்சசி’ படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக நடிகை ஜோதிகா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த பல்துறை நடிகருக்கான விருது நடிகர் அஜித் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஒத்த செருப்பு’ படத்தை இயக்கிய இயக்குநர் பார்த்திபன் சிறந்த இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.