Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

2016-2018 ஆண்டுகளுக்கான மாநில அரசின் திரைப்பட விருதுகளுக்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2016, 2017, 2018-ம் ஆண்டுகளுக்குரிய சிறந்த திரைப்பட விருதுகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் தேதியை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் தமிழக அரசின் சார்பில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கான விருதுகள் வழங்குவது வழக்கம்.

ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக இந்த விருதுகள் வழங்கப்படவில்லை. 2014-ம் ஆண்டு வரையிலான விருதுகள் அறிவிக்கப்பட்டாலும் அந்த விருதுகளும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 2016 முதல் 2018-ம் வரையிலான ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களுக்கான விருதுகளை அறிவிக்க இப்போதுதான் முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்த ஆண்டுகளுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் தேதியை வரும் 29-ம் தேதிவரையிலும் தமிழக அரசு நீட்டித்துள்ளது.

திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில், கலைவாணர் அரங்கத்தின் முதல் மாடியில் இருக்கும் உறுப்பினர் / செயலாளர், திரைப்படத் துறையினர் நல வாரிய அலுவலகத்தில் பத்து ரூபாய் செலுத்தி இதற்கான விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 100 ரூபாய்க்கு ஏதாவது ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ‘இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு துறை’ – ‘The Director, Information and Public Relations Department’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட கேட்பு வரைவோலையை(Demand Draft) இணைந்து மேற்கண்ட முகவரிக்கு வரும் அக்டோபர் 29-ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசின் செய்தித் தொடர்பு துறை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News