Friday, November 22, 2024

100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி – கஸ்தூரி – குஷ்பூ திடீர் மோதல்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழகத்தில் இருக்கும் சினிமா தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைகளுக்கு தமிழக அரசு இன்று அனுமதி அளித்துள்ளது.

இதற்காக தமிழக அரசினை திரையுலகத்தின் பல்வேறு அமைப்புகள் பாராட்டியுள்ளன. நன்றி தெரிவித்துள்ளன. நடிகர்கள் விஜய், சிம்பு, நடிகை குஷ்பூ உள்ளிட்டோரின் வேண்டுகோள்களும் இதை நோக்கி இருந்ததால் இவர்களது ரசிகர்களும் தமிழக அரசினை பாராட்டி வருகிறார்கள்.

இந்த நேரத்தில் நடிகை கஸ்தூரி மட்டும் இந்த 100 சதவிகித அனுமதிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகள் அனுமதிக்கப்படுவது ஆபத்தான ஒன்றாகும். ஒரு சினிமாக்காரியாக நான் இதைச் சொல்லவில்லை. நாம் தற்போது இந்த வைரஸை ’கொரோனா வைரஸ்’ என்றும் ’சீனா வைரஸ்’ என்றும் அழைக்கின்றோம். 100 சதவீத இருக்கைகள் அனுமதியால் ’சினிமா வைரஸ்’ என்ற கெட்ட பெயரை நாம் எடுக்க வேண்டுமா..?

இந்த ஆபத்தான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக முதல்வரையும், திரைப்பட ஹீரோக்கள் மற்றும் திரையுலகத்தினரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஒட்டு மொத்தமாக லாக் டவுன் ஆவதற்கு பதிலாக, தற்போது நமக்கு ஏற்பட்டிருக்கும் சிறிய இழப்பு மேல்தான்…” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த டிவீட் வெளியான சில நிமிடங்கள் கழித்து இந்த டிவிட்டுக்கு பதிலடியாக ஒரு டிவீட் செய்தியை பதிவிட்டுள்ளார் நடிகை குஷ்பூ.

குஷ்பூ தனது டிவீட் செய்தியில், “சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறித்து மாற்றுக் கருத்து உடையவர்களுக்கு ஒரு செய்தியை நான் சொல்ல விரும்புகிறேன்.

நீங்கள் தியேட்டருக்கு சென்றால் கொரோனா வைரஸ் பரவிவிடும் என்று கவலைப்பட்டால், தயவு செய்து தியேட்டருக்கு செல்ல வேண்டாம். உங்கள் பயம் புரிந்து கொள்ளக் கூடியதுதான். உங்களை யாரும் தியேட்டருக்கு வருமாறு கட்டாயப்படுத்தவில்லை. அதனால், உங்களை நீங்களே கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்…” என்று கூறியுள்ளார்.

இப்படி நடிகைகள் கஸ்தூரியும், குஷ்பூவும் மாறுபட்ட கருத்துக்களால் மோதிக் கொண்டது இன்றைய டிவிட்டர் களத்தைச் சூடு பறக்க வைத்துள்ளது.

- Advertisement -

Read more

Local News