நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார். அவருடைய சினிமா கேரியரில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த முக்கிய படங்களில் ஒன்று வேலையில்லா பட்டதாரி. மரியான், நையாண்டி போன்ற கலவையான விமர்சனங்களை பெற்ற படங்களுக்குப் பிறகு, 2014 ஆம் ஆண்டில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்தப் படம் தனுஷின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது எனலாம்.

இந்தப் படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்க, தனுஷ் தயாரித்தார். நடிகை அமலா பால் நடித்தார். அனிருத் இசையமைத்த அனைத்து பாடல்களும் ஹிட் அடைந்தன.
விஐபி வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டில் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால், முதல் பாகம் அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில், விஐபி திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இதனை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்த நடிகர் தனுஷ், “கல்ட் கிளாசிக்கின் 10ஆவது வருடம்” 10Years of VIP எனக் குறிப்பிட்டுள்ளார்.