வெப்பன் திரைப்படத்தின் ஒரு சூப்பர் ஹுயுமன் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அண்மையில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்திலும் ஒரு மாறுப்பட்ட கெட்டப்பில் நடித்து இருந்தார். அடுத்ததாக சத்யராஜ் ஓடிடி சீரிஸ் ஆன மை பெர்ஃபக்ட் ஹஸ்பண்ட் என்ற தொடரில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்பொழுது வெளியாகியுள்ளது. சத்யராஜுடன் சீதா, ரேகா மற்றும் ரேஷ்மா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்தொடரில் வர்ஷா பொல்லமா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்தொடரை தமிரா இயக்கியுள்ளார். விரைவில் இத்தொடரானது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. முகமத் ரசித் தயாரித்த இத்தொடரை வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000050916-819x1024.jpg)