Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

விலையுயர்ந்த கிளாமரான உடையில் தமன்னா போட்டோ ஷூட்… குவியும் லைக்குகள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்டும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் செய்து கொண்டனர். கோலாகலமாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்ற இந்த திருமண விழாவில் பல சர்வதேசப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகை தமன்னா, கறுப்பு நிறத்தில் மணமகள் போல அட்டகாசமான உடையில் வந்திருந்தார்.

இந்த விழாவில் பல பிரபலங்கள் மிகவும் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். அந்த வகையில் நடிகை தமன்னா அந்த திருமணத்தில் கறுப்பு நிறம் மற்றும் தங்கத்தால் ஆன உடையை அணிந்து மணமகள் போல் காட்சி அளித்தார். 

மிகவும் கிளாமரான உடையை தமன்னா அணிந்து வந்தார். இந்த லெஹங்காவின் விலை 3.85 லட்சம் ஆகும். இந்த உடையை ‘டோரனி வடிவமைத்து இருந்தார். தமன்னாவின் புகைப்படங்களும் வெளியாகின இந்த போட்டோ ஷூட்க்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகின்றன.

- Advertisement -

Read more

Local News