Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சசிகுமார்…. இன்று வெளியாகிறது நந்தன் படத்தின் முக்கிய அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இத்திரைப்படம் இன்றும் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. ‘சுப்ரமணியபுரம்’ படத்திற்குப் பிறகு, சசிகுமார் ‘ஈசன்’ படத்தை இயக்கினார். அதன் பிறகு அவர் தனது கவனத்தை நடிப்பில் மையப்படுத்தினார். ‘அயோத்தி’ திரைப்படம் வெற்றியடையச் செய்து அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது.

‘உடன்பிறப்பே’ படத்தை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘நந்தன்’ திரைப்படம், படப்பிடிப்பு முடிந்தபின்னும் நீண்ட நாட்களாக வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இப்படத்தில் சசிகுமார் நாம் இதுவரை பார்த்திராத தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் ஸ்ருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘நந்தன்’ படத்தை குறித்த பெரிய அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளனர் என்று படக்குழு அறிவித்துள்ளது. தற்போது, இந்த அறிவிப்பை சசிகுமார் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News