Monday, November 18, 2024

விஜய், அஜித், சூர்யா என முண்ணனி ஹீரோக்களின் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்த மோகன் நடராஜன், உடல்நலக் குறைவால் நேற்று சென்னையில் காலமானார்; அவருக்கு வயது 71. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த அவர், மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் “ஸ்ரீ ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ்”.

1986-ஆம் ஆண்டு மோகன் நடராஜன் தயாரிப்பில் வெளிவந்த முதல் படம், மோகன்-நதியா நடித்த பூக்களைப் பறிக்காதீர்கள் என்ற சூப்பர் ஹிட் திரைப்படம். தரங்கை வி. சண்முகம் என்பவருடன் இணைந்து படங்களைத் தயாரித்தார். தொடர்ந்து, பிரபு நடித்த என் தங்கச்சி படிச்சவ, சத்யராஜ் நடித்த “வேலை கிடைச்சிடுச்சி”, அருண்பாண்டியன் நடித்த கோட்டை வாசல், விஜய் நடித்த கண்ணுக்குள் நிலவு, அஜித் நடித்த ஆழ்வார், சூர்யா நடித்த வேல் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்தார்.

மோகன் நடராஜன் “நம்ம அண்ணாச்சி”, “சக்கரைத்தேவன்”, “கோட்டை வாசல்”, “புதல்வன்”, “பிள்ளைக்காக”, “பாட்டுப்பாடவா”, “அரண்மனை காவலன்”, “பதவிப்பிரமாணம்”, “மகாநதி”, “பட்டியல்” உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். அவரது இறுதிச்சடங்கு இன்று மதியம் 3 மணிக்கு சென்னை, திருவொற்றியூரில் நடைபெற உள்ளது.

- Advertisement -

Read more

Local News