பிரபல பத்திரிக்கைக்கு ‘தி கோட்’ இயக்குனர் வெங்கட்பிரபு அளித்த பேட்டி!
அஜித் சார் ‘மங்காத்தா’ பண்ணும்போதே, அடுத்து விஜய்யை வச்சுப் பண்ணு, ரொம்ப நல்லா இருக்கும்’னு சொல்வார். (G.O.A.T பண்ணுறதைச் சொன்னதும், ‘என்னய்யா. எத்தனை வருஷமா நான் சொல்லிட்டிருக்கேன். சூப்பர். அருமையா பண்ணு’ன்னு சொன்னார். கொஞ்ச நாளைக்கு முன்னாடி அஜித் சார் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும்போது அவரைப் பார்க்கப் போயிருந்தேன். போவதற்கு முன்னால் விஜய் சார்கிட்ட, ‘அஜித் அண்ணாவைப் பார்க்கப் போறேன்’னு சொன்னேன். ‘போனதும் போன் போட்டுக்குடுடான்னு சொன்னார்.
விஜய் சார்கிட்ட போன் போட்டுக் கொடுத்ததும் அவங்க இரண்டு பேரும் அழகா, சாதாரணமா, இயல்பா, சந்தோஷமாக பேசிட்டிருந்தாங்க, அவங்க இரண்டு பேரும் நண்பர்களாக பேசிக்கிறாங்க படம் ஆரம்பிக்கும் போதே அஜித் சார். ‘மங்காத்தா மாதிரி நூறு மடங்கு இருக்கணும்டா. அப்படிப் பண்ணுன்னு என்கிட்ட சொன்னார். எவ்வளவு பெரிய மனசு இருந்தால் இந்த வார்த்தை வரும் பாருங்க. அவங்க கிட்ட பாசிட்டிவ் அலைவரிசையை அன்னைக்குத்தான் பார்த்தேன். அஜித் சார் சொன்ன மாதிரி செய்திருக்கேன்னு நினைக்கிறேன்.
மக்கள்தான் எத்தனை மடங்குன்னு சொல்லணும் விஜய் சார் சினிமா பயணத்திற்கு Farewell மாதிரித்தான் இந்தப் படம். மக்கள் விஜய் சாரை நினைத்து சந்தோஷப்பட என்ன இருக்கோ, அத்தனையும் செய்திருக்கேன். விஜய் சாருக்கு ரொம்ப பிடித்து விட்டது. ஒரு படத்தைப் பற்றி விஜய் சார் இவ்வளவு சொல்லக் கேட்டதே கிடையாது என்று அவரது டீம் சொன்னாங்க. எனக்கு விருதுகளைவிடவும் இதுதான் சந்தோஷம் என கூறியுள்ளார்.இது ரசிகர்கள் அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.