சினிமா களத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்து இருப்பவர் ஜெயம்ரவி. ஆனால் கடந்த சில வருடங்களாக எந்த படங்களும் அவருக்கு சரியாக அமையவில்லை. மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் மட்டுமே தப்பித்துக் கொண்டது.
ஜெயம்ரவி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சைரன் எதிர்பார்த்தளவில் இல்லை. இந்நேரத்தில் ஜீனி என்ற ஒரு புதிய படம் தயாராகி வருகிறது. இப்படத்தை அர்ஜூன் ஜே.ஆர் இயக்கியுள்ளார்.வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளது.
தற்போது அடுத்தடுத்து என பல படங்களுக்கு இசையமைத்து வரும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் எனவே மேலும் இப்படத்திற்கு மவுசை சேர்ந்துள்ளது.
இந்த ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இப்பட போஸ்ட்ர்களை காணும் போது பூதம் போன்ற தோற்றத்தில் இருக்கிறார்.இப்படம் குழந்தைகளையும் கவர்ந்து இழுக்கும் வகையில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதேபோல் ஜெயம்ரவியின் நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.இத்துடன் ஜீனி இணைந்துள்ளது.
இப்படத்தில் ஜெயம்ரவியுடன் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி ப்ரியதர்ஷன், வாமிக்கா கபி மற்றும் கல்யாணி என மொத்தம் 4 ஹீரோயினிஸ் நடித்துள்ளனர். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சற்றே புது முயற்சியாக வித்தியாசமான கதை களமாக இப்படம் இருக்கும் எனவும், பேன்டசி என்டர்டெயினராக அதிக பட்ஜட்டில் எடுக்கப்பட்டுள்ளாதால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.