Saturday, September 14, 2024

‘மகாராஜா’ போல் மகாராணி… நயன்தாராவை இயக்குகிறாரா நித்திலன் சுவாமிநாதன்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ஐம்பதாவது படம் மகாராஜா. சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது. நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோர் மகாராஜா படத்தைப் பார்த்து நித்திலனை அழைத்து பாராட்டினார்கள்.

இந்த நிலையில், நித்திலன் தனது அடுத்த படத்தை மகாராஜா படத்தை தயாரித்த அதே பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் சேர்ந்து இயக்க உள்ளார். இந்த படத்திற்கு மகாராணி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது, இதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளார். இப்படம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

- Advertisement -

Read more

Local News