இயக்குனர் சங்கருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இளைய மகள் அதிதி சங்கர் மருத்துவம் படித்துவிட்டு சினிமா ஆசையால் ‘விருமன்’ படத்தின் மூலம் நடிகையானார்.
மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் என்பவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சில பிரச்சனைகள் காரணமாக ஐஸ்வர்யா திருமணமான ஆறு மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்
.
இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது திருமணம் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. இந்த நிலையில் வருகிற 15ஆம் தேதி ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளில் இயக்குநர் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். பல முக்கிய பிரமுகர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கி திருமண விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்.