Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதிதானா? படத்தை தயாரிப்பது இவர்களா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூர்யா மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாக வேண்டிய படம் ‘புறநானூறு’. ஆனால், அந்த படத்தில் சூர்யாவுக்குப் பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கான ஒப்பந்தம் கூட கையெழுத்தாகிவிட்டது என்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தைத் தயாரிக்க யார் என்பது கேள்வியாக இருந்தது. தற்போது அது குறித்த தகவல்கள் சில உலாவருகின்றன. அதன்படி சிவகார்த்திகேயனின் நண்பரும், ‘பிரின்ஸ், மாவீரன்’ படங்களின் தயாரிப்பாளருமான அருண் விஷ்வா,  ரத்தீஷ் என்பவருடன் என மூவரும் இணைந்து தயாரிக்க உள்ளார்கள் எனவும் மற்றொரு புறம் பிரபல தயாரிப்பு நிறுவனமான KVN நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் உலாவருகின்றன.

படத்தை முதல் பிரதி அடிப்படையில் தனது சொந்த நிறுவனமான மீனாட்சி சினிமாஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கப் போகிறாராம் சுதா கொங்கரா. சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து ‘டான்’ இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ஒரு படத்திலும், வெங்கட்பிரபு இயக்க உள்ள ஒரு படத்திலும் நடிக்க ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ளார் என சொல்லப்படுகிறது. அவற்றிற்கு முன்பாக சுதா இயக்க உள்ள ‘புறநானூறு’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News