நடிகை ஸ்ரீதேவி விஜய்குமார் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளவர். தமிழில் மாதவன், ஜீவா போன்ற நடிகர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்தவர். பிறகு, ஒரு கட்டத்தில் திரைப்படங்களில் நடிப்பதை விட்டு, திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஸ்ரீதேவி தற்போது ஒரு தெலுங்கு படத்தில் இணைந்துள்ளார்.
இப்படத்தில் நரா ரோகித் மற்றும் ஸ்ரீதேவியுடன் விருத்தி வாகினியும் இந்த படத்தின் நாயகியாக நடித்து வருகிறார். காமெடி கலக்கலாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுந்தரகாண்டா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் வெங்கடேஷ் நிம்மலபுடி இயக்கி வருகிறார், மேலும் நர ரோகித் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் டீசர் வெளியானதிலிருந்து ஏராளமான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், பிரபாஸின் முதல் பட நாயகியான ஸ்ரீதேவி விஜய்குமார், சுந்தரகாண்டா பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பிரபாஸ் குறித்து பேசியிருந்தார்.பிரபாஸின் கேரக்டரில் இத்தனை ஆண்டுகள் கழித்தும் மாற்றம் இல்லாமல் இருப்பதை பாராட்டியுள்ளார். ஈஸ்வர் படத்தில் அவர் எவ்வாறு இருந்தாரோ அதேபோல் தற்போது அவர் மிகவும் எளிமையான குணாதிசயங்களுடன் காணப்படுவதாக ஸ்ரீதேவி கூறியுள்ளார். பிரபாஸ் பெரிய பெயரும் புகழும் பெற்றபோதிலும், அவரது கேரக்டரில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்தார்.